பக்கம்:முத்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

அவன் காபி யை ரசித்துச் சாப்பிட்டான்

'காப்பி எப்படி யிருக்கு?' என்று விசாரித்தாள் பத்மா.

'ரொம்ப ஜோர். அருமை' என்றான் திருப்தியோடு.

அவள் பெருமையாகச் சொன்னாள் 'நானே தயாரித்தேன்’ என்று.

"ரொம்ப நல்லாருக்கு என்னாலே உங்களுக்கு ரொம்பச் சிரமம்" என்றது அவன் வாய். அது தானே! இவ்வளவு அழகான கரங்கள் தயாரித்து, அழகியே எதிர் நின்று மணிக் கரத்தால் அன்புடன் அளிக்கும் பொழுது காப்பி கசக்கவா செய்யும். அமிர்தமாமே. அதன் சுவையெல்லாம் கெட்டது போ!' என்று மனம் சொன்னது. அதை ஒலிபரப்பும் துணிவு அவனுக்குக் கிடையாது.

"சிரமம் ஒண்ணுமில்லே. இதிலே என்ன சிரமம்?' என்று பெருமையும் மகிழ்வும் கலந்து பதிலளித்தாள் அவள்.

'தினசரி நீங்க தான்... ... 'இல்லையில்லே. வேலைக்காரி இருக்கிறாள். இன்று நீங்கள் விசேஷமாக வரப்போவதனால் ஸ்பெஷலாக இருக்கட்டுமேன்னு நான் தான்...'

“ரொம்ப சந்தோஷம். தேங்ஸ்... தேங்ஸ்’ என முனங்கினான் அவன்.

'நீங்கள் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறீர்களா?

"ஆமாம். எத்தனையோ வருஷங்களாக அப்படித்தான். மனிதன் குடும்பமாக வாழும் பிராணி என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/31&oldid=1496638" இலிருந்து மீள்விக்கப்பட்டது