பக்கம்:முத்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கிறார்கள். அது சரி தான். ஆனால் முழுதும் சரியல்ல என்று தான் நான் சொல்வேன். மனிதப்பிராணி ளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். பெண்கள் சமையலைச் சாப்பிட்டு வாழ்கிறவர்கள், தாங்களே சமைத்து உண்டு உயிருடன் வாழமுடிகிறவர்கள்; ஹோட்டலில் சாப்பிட்டுவாழும் ஜந்துக்கள்! என்னை மாதிரி எவ்வளவோ பேர் ஹோட்டல் பிராணிகளாகவே வாழ்கிறார்கள். என் வாழ்வு பூராவும் அப்படியே கழிந்து விடும்" என்றான்,

அவள் சிரித்தாள். "நீங்கள் பேசுவது எனக்கு அதிகம் பிடிக்கிறது. சுவையாக இருக்கிறது. அன்று நீங்கள் விஷயங்களை விளக்கியதும், திறமையாகப் பதிலளித்து விவாதம் புரிந்ததும் சிறப்பாக இருந்தன" என்று பாராட்டினாள்.

நானென்ன பெரும் பேச்சுப் புலிகள், கொம்பர்கள் அருகிலே நான் வெறும் பூனை போல் தான்' என்று சொல்லிச் சிரித்தான் அவன், அவளது கலகலச் சிரிப்பும் இணைந்தது.

இப்படி மனோகரமாக ஆரம்பித்த சம்பாஷணை ரம்மியமாக வளர்ந்து கொண்டேபோயிற்று. முதல் சந்திப்பே அவனையும் அவளையும் நெடுநாட்களாகப் பழகிப் பேசி மகிழும் நண்பர்கள் போலாக்கி விட்டது. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய வைகளை யெல்லாம் அவள் அறியமுடிந்தது. தன்னைப் பற்றியும் விரிவாகத் தெரிவித்தாள்.

தான் தாய்தந்தையரற்று தனியாக வளர நேர்ந்ததால், தாத்தா அவளது விருப்பு வெறுப்புகளுக்கு, வினோதமான ஆசைகள், புதுமையான போக்குகள் எதற்குமே வேலி கட்டியது கிடையாது. தடை விதித்தது கிடையாது. 'பத்மா தங்கமான பெண். அவள் தவறுகள் எதுவுமேசெய்யமாட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/32&oldid=1496639" இலிருந்து மீள்விக்கப்பட்டது