பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய நாடோடி

ரஷ்யக் கதாசிரியர் மாக்ஸிம் கார்க்கி ரகம் ரகமான வேடிக்கை மனிதர்களை தமது எழுத்துக்களில் வாழவைத்திருக்கிருர், அவர் சுட்டிக் காட்டியுள்ளவர் களில் பெரும்பாலோர் சமுதாயத்தின் அதல பாதா ளத்தில் காணப்படுகிறவர்கள். வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்களும், வாழ முடியாமல் போன தளுல் மனநோய் உற்றவர்களும், குடிகாரர்களும், நாடோடிகளும் கார்க்கியின் கதைகளில் அதிகமாகத் தென்படுகிருர்கள். அவர்களில் ஏனையோர் பலரினும் தனிப்பட்டவன்-விசித்திர மனிதன்-நாடோடி கணுேவ லோவ்.

  • அவன் சிறப்பானவன், அவனைப் போன்ற மனிதர்களே இந்த உலகத்தில் நாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்று குறிப்பிடுகிருர் கதாசிரியர்.

அவர் தமது பதினெட்டாவது வயதில், ஒரு ரொட்டிக் கிடங்கில் உதவியாளனுகப் பணி புரிந்து கொண்டிருந்தபோது, அந்த அதிசய மனிதனைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்குத் தலைவனாக இருந்த ஒரு குடிகாரத் தடியனே விரட்டிவிட்டு, திறமையும் தேர்ச்சியும், செயல்வேகமும் பெற்றிருந்த கைேவ லோவ் என்கிறவனே வேலைக்கு அமர்த்தினர் பேக்கரி முதலாளி. -

நெட்டையானவன். தடந்தோளான். சரியான நாடோடி எனக்காட்டும் தோற்றத்தினன். மார்பு மீது ஒரு விசிறிபோல் பரந்து கிடந்த அழகான தாடி உடை யவன். நீண்ட, வெளிறிய, முகம் அனுபவத்தின்