பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# * {}

கள் செய்தான். ஆயினும் அவளே மணந்து-ொள்ளும் எண்ணம் அவனுக்கு இல்லை. அந்த இளம்.ெ ண் மீது அனுதாபம் கொண்டு, அவளை நரக வாழ்விலிருந்து விடு விக்க விரும்பியே அவ்விதம் செய்ததாகக் கூறுகிருன்.

"கல்யாணம் செல்து கொள்வதா? என்னைப்போன்ற குடிவெறியன் எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும்? பொம்பிளேகள் அப்படித்தான். கல்யாணம், குடித்தனம், கூடிவாழ்வது என்றுதான் நச்சரிப்பார்கள். தானும் எவ்வளவோ பொம்பிளேகளோடு பழகி விட்டேன்’ என்று அவன் மாக்ஸிமிடம் தனது அனு பவங்களைச் சொல்கிருன்.

பொதுவாக, நாடோடிகளே பெரும் அளப்பர்கள் தான். பெரிய இடத்துப் பொம்பிளேகளும், சீமாட்டிகளும் பணக்காரன் மனைவிகளும் தங்களிடம் மோகம் கொண்டு விட்டது பற்றியும், அவர்களைத் தாங்கள் ஆட்டிவைத்த விதங்கள் குறித்தும் நாளுக்கு ஒரு தினுசாகவும், பொழு துக்கு ஒரு விதமாகவும் அளந்து தள்ளுவார்கள். ஆகுல் இவன் பேச்சில் உண்மை தொனித்தது. இவன் கூறிய சில அனுபவங்களில் நயமும் நளினமும் ரேகை யிட்டு ஓடின.

‘எப்பவாவது சில சமயங்களில் என்னுள் துயரம் மண்டி, உயிரோடு இருப்பதையே சகிக்க முடியாதபடி செய்கிறது. இந்தப் பரந்த உலகத்திலே நான் ஒரு ஜந்து தான் உயிரோடு இருப்பது போலவும், வேறு பிராணி எதுவுமே இல்லாதது போலவும் எனக்குப் படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் நான் எல்லோரையும்என்னையும் மற்றும் அனைவரையும் - வெறுக்கிறேன். ஒவ்வொருவனும்-எல்லோரும் செத்தொழிந்தால் கூட நான் கவலைப் படமாட்டேன். இது என்னுள் குடி யிருக்கும். ஏதோ வியாதி என்றுதான் தோன்றுகிறது?