பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11

என்று அவன் சொன்னன். இதர நாடோடிகளைப் போல் அவன் ஜம்பமாகப் போலிப் பெருமை பேசுவ தில்லை ; நடக்காத - நடக்க முடியாத - அளப்புகளேத் திரித்து மகிழ ஆசைப்பட்டதில்லை. அப்படிப் பேசும் குணமுடையவர்களைக் குறை கூறுவதுமில்லை அவர் கள் ஏன் அவ்வாறு சொல்லக்கூடாது ? வாழ்க்கையில் குறிப்பிடத் தகுந்தது எதையும் ஒருவன் கண்டிராவிட் டால், அவன் இனிய கதை ஒன்றை சிருஷ்டித்து அது உண்மையாக நடந்தது என்று ஏன் சொல்லக்கூடாது? அது யாருக்கும் எவ்விதமான தீங்கும் செய்வதில்லையே. அதுைச் சொல்கிறபோது, அவனே அதை நம்பத் ங்குகிருன். நிஜமாகவே அது தன் வாழ்க்கையில் நடந்ததாக நம்புகிருன், அது அவனுக்கு மகிழ்ச்சியும் நல்ல உணர்வும் கொடுக்கிறது. எவ்வளவோ பேர் இப்படி உற்சாசம் பெறுகிருர்கள்’ என்று அவன் சொல்லுவான். இவ்விதம் அனுபவ ஞான மொழிகளை ஒலி பரப்புவதிலும் அவன் தனிபட்டவன்தான்.

அவன் தொழிலில் ஒரு கலைஞன். நல்ல திறமை யான உழைப்பாளி. அதே சமயம் விளையாட்டுத்தனம் கொண்ட சிறுபிள்ளை போலவும் காட்சி தந்தான். எளிதில் உணர்ச்சி வசப்படுகிற அப்பாவியாகவும் இருந்தான். அவன் மாக்ஸிம் புத்தகங்களில் உள்ள உணர்ச்சிகரமான வீரதீரக் கதைகளைப் படித்துக் காட்டு கிறபோது, கனேவலோவ் மிகுதியும் பாதிக்கப்படுவது வழக்கம். அவை வெறும் கதை, கதாபாத்திரங்கள் கற்பனைப் படைப்புகள், அவர்களுக்கு நேர்ந்த துன்ப துயரங்களும் சோதனைகளும் கொடுமைகளும் ஆசிரியர் களின் திறமையில்ை தான் நிஜமாக நிகழ்ந்தவைபோல் சித்தரிக்கப் பட்டுள்ளன என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை. கதாபாத்திரங்களின் அனுபவங்களே எண்ணி அவனே மிகுந்த மனக்கஷ்டம் அனுப விப்பான். இப்படி மற்றவர்களின் வேதனைகளைக்கண்டு,