பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #2

அவற்றை எழுத்தாக்கி வைத்த எழுத்தாளர்களுக்காக அவன் அனுதாபப்படுவதுமுண்டு.

இந்த எழுதும் ஆசாமிகள் உண்மையில் மற்ற வர்களின் துயரங்களை உறிஞ்சிக் கொள்கிற கடல் பஞ்சுகள் மாதிரிதான். இதற்கு வசதியாக அவர்கள் விசேஷ சக்தியுடைய கண்களைப் பெற்றிருக்கிருர்கள். தனிரகமான இதயம் கூட அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் நீண்ட காலம் வாழ்க்கையைக் கவனித்தால், அது அவர்களுள் வேதனையை புகுத்தி விடுகிறது. அதை அவர்கள் தங்களுடைய புத்தகங்சளில் கொட்டி வைக்கிருர்கள். ஆனல் அது அவர்களுக்கு நன்மை செய்வதில்லை. ஏனெனில் அவர்களுடைய இதயமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு தடவை வேதனை உள்ளத் தில் புகுந்துவிட்டால் போதும், அப்புறம் அதை அகற்றவே முடியாது’ என்றும் அந்த நாடோடி சொல் கிருன்,

‘நான் யார்? ஒரு நாடோடி. குடிகாரன். ஒன்றுக் கும் உதவாதவன். சீர்கெட்டுப் போனவன். என் னுடையதைப் போன்ற வாழ்க்கையில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. நான் எனது துயரத்திலேயே வாழ்கிறேன். அது ஏன் என்று எவருக்கும் தெரியாது. நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், ஏதோ ஒன்றைத் தேடியபடி. அந்த எதுவோ ஒன்றுக்காக ஏங்கியபடி. ஆளுல் அது என்ன? எனக்கே தெரியாது’ என்கிருன்.

சில கதாபாத்திரங்களின் அனுபவங்களைக் கேட்டு அவன் என்ன சொல்கிருன், எப்படி ஆசைகளை வளர்க் கிருன் என்பவை விவரமாக வர்ணிக்கப்பட்டுள்ளன கதையிலே. கனுேவலோவ் எத்தகைய விந்தை, மனிதன் என்பதை அவை எடுத்துக் காட்டும்.

மனிதர்கள் எவ்வாறு சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் முதலியவற்ருல் பாதிக்கப்படுகிருர்கள் என்றும், வாழ்க்