பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

ஒருவனின் மகன். இவனும் அதிகமாகவே குடிப்பது உண்டு. மனக்கோளாறு வேறு. தனது அம்மா சொன்ன கதைகள், தான் படித்த-கேட்ட-கதைகள் முதலியவைகளில் உள்ள சம்பவங்களை எல்லாம் தானே அனுபவித்து ரசித்ததாக அளப்பான். இரண்டு மூன்று நாட்கள் காணுமல் போய்விடுவான். திரும்பி வந்ததும் கயிறு திரிப்பான்.

"நான் மலைப் பக்கம் போயிருந்தேன். நெடுங் கொம்புகளை உடைய கலைமான் தென்பட்டது. அதைத் துரத்தினேன். அது வேகமாக ஓடியது. ஒரு இடத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டது. அதன் முதுகு மேலே ஏறி உட்கார்ந்தேன். உடனே அது ஒடத் தொடங் கியது. மலேமுடிக்கு மலைமுடி தாவியது. ஒரு பெரிய பள்ளம் தென்பட்டது. அதைத் தாவும் பொழுதுமான் பள்ளத்தில் விழுந்துவிட்டது. நானும் விழுந்தேன். மண்டையில் அடிபட்டு மயங்கிக் கிடந்தேன். இன்று தான் எனக்கு உணர்வு வந்தது. எழுந்து வருகிறேன்’ என்று அவன் சொல்லுவான். அவனைப் பொறுத்த வரையில் எல்லாம் உண்மையில் நிகழ்ந்ததாகவே அவனுக்கு ஒரு மயக்கம். r

உள்ளுர்த் தடியனிடம் இவன் செம்மையாக "உதை தின்று இருப்பான்! ஆல்ை, அந்தத் தடியனை நான் வெளுத்து வாங்கிவிட்டேன். அவன் கை இனி மேல் தம்பிடிக்குப் பிரயோஜனப்படாது. பயலைச் சட்னி பண்ணி யிருப்பேன். பாவம், போருன் போ என்று விட்டுவிட்டேன்’ என்று பலரிடமும் கூறுவான்.

வன கன்னியரோடு கூடிக் கும்மாளியிடுவான்; அப்படி அவன் நம்பிக் கொள்வான்! குகை ஜீவிகளின் மன்னர் மகளை மணம் புரிகிருன். பாலைவனத்தில் போகிற போது, கொள்ளைக் கூட்டத்தார் பதுக்கி வைத் திருந்த பொன்னையும் பொருளையும் சுலபமாக அடை

5