பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[33] காதலின் ஏக்கம் t):றன்பால் மனத்தைப் பறிகொடுக்கின்ருள் மங்கை யொருத்தி, இவனது மனம் ஒரு கிலேயில் இல்லை எதை எதையோ எண்ணுகின்றது. மாறனது ஏற்றத்தையும் தனது தாழ்ந்த கிலேயை யும் ஒப்பிட்டு நோக்குகின்ருள். அது மலைக்கும் மடுவிற்குமுள்ள வேற்றுமையிலும் மிகுதியாக உள்ளது. என்ன செய்வாள்? தோழி யிடம் இவ்வாறு சொல்லுகின்ருள்: " தோழியே, மாறனைப்பற்றி யாது மொழிவதெனத் தோன்ற வில்லை. பாண்டியனே தன்னேரில்லாத் தனிக்குடையின் கீழிருந்து கொண்டு செங்கோலோச்சுபவன் யாருக்கும் உட்படாதவன் ; மன் னர் மன்னன். வானத்திற்கு எதிராகப் பொருந்திய இந்த உலகை யெல்லாம் கட்டி ஆள்பவன் இந்த நிலப்பரப்பு முழுவதும் அவ னுடைய ஆட்சியிலுள்ளது. யானே மிகவும் எளியவள்; அதிலும் பெண்ணுகப் பிறந்துவிட்டவள். அயலேயாகிய என்னுல் என்ன செய்யமுடியும்? எப்பொழுதும் குளிர்ச்சி பொருந்திய மாலையை யணிந்த மாறன் தாளுக மனம் இரங்கி என்பால் தண்ணளி செய் தால் பயன் உண்டு; அங்ஙனம் அவன் என்பால் இரக்கம் காட்டி அருளாவிடில், அவனே ஆற்றுப்படுத்துபவர் யாவர் உளர் : ஒருவரு மில்லையே. ஏழையேன் என் செய்கேன் ? என்கின்ருள். இந்த கங்கையின் மனநிலையைக் காட்டும் முகத்தான் நம்மனத்தை உருக்கும் முறையில் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது: தானேற் றணிக்குடைக் காவலனுற் காப்பதுவும் வானேற்ற வையக மெல்லாமால்-யானுே எளியேனுேர் பெண்பாலே னிர்ந்தண்டார் மாறன் அணியானே லன்றென்பா ரார். (பா வே.) 9. எளியதளுேர் ; 13, அளியனே.