பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F4} காதல் பகுத்தும் பாரு! ஒருவருக்கு ஒரு செயலில் ஈடுபாடு அதிகப்பட்டுவிட்டால் அச்சிெயல் வெற்றியாகவேண்டுமே என்று சதா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பர். சோதிடரைக்கொண்டு ஆராய்வோமா, ஆரு டக்காரரைக் கண்டு கேட்போமா, பூ வைத்துப் பார்ப்போமா என் றெல்லாம் எண்ண அலைகள் தோன்றும் அதிலும் காதல்பற்றிப் பெண்களுக்கு அக்கறை ஏற்பட்டுவிட்டால் சொல்லவேண்டிய தில்லை. குறத்தியிடம் குறி கேட்பர் : குறத்தி கிடைக்காவிட்டால் தாமே ஒருவகையில் மணலில் சுழித்துக் குறிபார்த்துக்கொள்வது அவர்களது வழக்கம். இஃது அவர்களின் செயல் , தம்முன் மணலை ஒழுங்காகப் பரப் பிக்கொள்வர். கண்களை மூடிக்கொண்டு வலக்கை ஆள் காட்டி விரலால் மணலில் ஓரிடத்தில் சுழிக்கத் தொடங்கிச் சிறுசிறு சுழிகள் வருமாறு வட்டமாகப் போட்டுக்கொண்டே செல்வர். இங்ங்ணம் செய்வதில் முதற் சுழி கடைசிச் சுழியுடன் பொருந்தக் கூடினுல் காரியம் கைகூடிவிடும் என்பது குறிப்பு; கூடாது தவறில்ை காரியம் தோல்வி என்பது பொருள். இவ்வாறு குறிபார்க்கும் செயல் கூடல் இழைத்தல் என்று வழங்கப்பெறுகின்றது. 烹 X X மாறனைக் கண்டு மையலுற்ற மங்கை யொருத்தி அவனை எப் பொழுது அடைய முடியுமோ என்று கினைத்து ஏங்குகின்ருள்; நெகிழ்ச்சி அடைகின்ருள். அவனுடன் கூடும் பேறு கிட்டுமோ கிட்டாதோ என்ற ஐயப்பாடு நாளுக்கு நாள் அவளிடம் வளர்ந்து கொண்டேவருகின்றது. மன அமைதியின்றித் திண்டாடுகின்ருள் அவள். குறி பார்க்க எண்ணுகின்ருள்; அப்படிச் செய்தால் தன் நினைவு பிறர்க்குப் புலனுகிவிடுமே என்றும் அஞ்சுகின்ருள். இறுதி யில் தானே கூடலிழைத்துக் குறி பார்க்க முடிவு செய்கின்றுள்.

  • கூடல் மணலில் போட்ட முதற்சுழியும் இறுதிச் சுழியும் ஒன்ருகக் கூடுதல், இதன் எச்சியார் திருமொழி (4) உரையாலும், திருச்சிற்றம்பலக் கோவையாலும் (செய் . 186), அம்பிகாபதிக் கோவையாலும் (செய் - 322) அறியலாம்.