பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[43] கிழவியாகவே பிறந்தாளோ ? பூட்டத்து யானையின்மீது உலா வந்த மாறனே மங்கை யொருத்தி காண்கின்ருள்; மால் கொள்கின்ருள். அவனைக் கடை , தொட்டு அவளது செயல்கள் யாவும் மாறுபடுகின்றன. அன்றிருந்து பாண்டியன் உலா வரும்பொழுதெல்லாம் பட படவென்று வாசல்வரை ஓடுவதும் வேந்தனக்கண்டு களிப்பதுமாக இருக்கின் ருள். நாளடைவில் காதல் முற்றிவிடுகின்றது. அதல்ை அவள் உணவினைச் சரியாக உண்பதில்லை நல்ல உறக்கம் கொள்ளுவது மில்லை. ஏதோ பித்துப் பிடித்தவள் போலாகின்ருள். தன் மகளது நிலையை அன்ன அறிகின்ருள் : மால் கொண்ட நிலையை ஊகித்தறிகின்ருள். இனி, பாண்டியனக் கண்ணுலும் கூடப்பார்க்கக்கூடாது என்று தடையுத்தரவு போடுகின்ருள்; தெரு, பக்கமே போகக்கூடாது என்று கடிகின்ருள். மகளுக்கு இந்தக் கெடுபிடி’ சிறிதேனும் பிடிக்கவில்லை. என்ன செய்வாள்? ஒருநாள் அயலூர் சென்றிருந்த வயதில் தன்னுடன் ஒத்த தோழி யொருத்தி வந்தாள். சாதாரணமாக அவளிடம் இவள் எல்லாச் செய்திக%ா பற்றியும் உரையாடுவது வழக்கம். வேற்றுாரிலிருந்து வந்த கோலத் துடன் தோற்றமளித்த தோழியிடம் இவ்வாறு கூறுகின்ருள் : "தோழியே, வா. அயலூர் சென்றுவந்த தோற்றமா, இது புதியவளாக மாறிவிட்டாயே, உன்னுடைய தோள் நீண்டு அழகாக இருக்கின்றது. தோளுக்கேற்ற தோள்வளையம் தோளே அது ஆசை யோடு கட்டிக்கொள்வது போலிருக்கின்றதே. நல்ல பொருத்தம்! நீ கண்ணுக்கு மை தீட்டியதும் மிக அழகாக அமைந்துள்ளது. அமைப்பில் உன்னுடைய கண், வாளேயும் வென்றுவிட்டது ' என்ற பீடிகையுடன் வரவேற்கின்ருள். வளையவாய் நீண்டதோள் வாட்களுய் ! என்று விளித்து அவளுக்கு வரவேற்பு தருகின்ருள். இருவரும் எதை எதையோ பேசுகின்றனர். பேச்சின் நடுவில் தன் கிலையைத் தோழிக்கு இவ்வாறு உணர்த்துகின்ருள் அந்த நங்கை.