பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் அறியாமை # 35 வில்லாத வேட்டுவன ஒத்துள்ளாள். பார்வைக் காடையைக் கூட்டி லிருந்து பறந்துபோகும்படி விடுத்துப் பின்பு வெறுங் கூட்டைக் காப் பதுபோல் பாண்டியன்பால் நெஞ்சினைப் போக்கிய இந்த வெறுங் கூடாகிய உடலைக் காக்கின்ருள். காடை புறத்தே போனபின்பு கூடு எங்கிருந்தால் என்ன ? முதலிலேயே என்னைப் புறத்தே போகவிடாது வீட்டிற்குள்ளேயே வைத்துக் காத்திருந்தால் என் மனமும் மாறன் பால் சென்றிருது. எனக்கும் இத் துன்பம் நேர்ந்திராது. இது தும்பைத் தெறித்துவிட்டுக் கன்றின் வாலேப் பிடிப்பது போலல்லவா உளது?’ என்கின்ருள். மங்கையின் மனநிலையைக் கவிஞர் காட்டும் சொற்படம் இது: கோட்டெங்கு சூழ்கூடற் கோமானேக் கூடவென வேட்டங்குச் சென்றவென் னெஞ்சறியாள்-கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்பே லன்னே வெறுங்கூடு காவல்கொண் டாள். இது கைக்கிளை , இற்செறிக்கப்பட்ட மங்கை தன் நெஞ்சொடு உரைப்பது. விளக்கம் : கோள் தெங்கு சூழ் கூடற்கோமான் குல குலையாகத் தேங்காய்களைத் தாங்கி கிற்கும் தென்னை மரங்கள் சூழ்ந்துள்ள மதுரை மன்ன னை பாண்டியன. கோள் - குலை. வேட்டு - விரும்பி ; ஆசை கொண்டு. கூட்டே கூட்டில். குறும்பூழ் காடை. கையு ைதாகி விடினும் குறும்பூழ்க்குச் செய்யுள தாகு மனம். ’ என்ற பழமொழிப்படி 'பழமொழி நானுன்று 95) காடையை எவ்வளவு அன் பாக வளர்த்தாலும் அதன் மனம் வயலில் இருப்பதிலேயே செல்லும், பறப் பித்த பறந்துபோக இடங் கொடுத்து ஏமாந்த, வேட்டுவன் வேடன். வெறுங்கூடு காவல் கொண்டாள் - மனம் பாண்டியனுடன் களித்திருக்க, உடலை மாத்திரம் இங்குக் காவல் புரிகின்ருள். பாடலைப் பலமுறைப் படித்துச் சுவைத்தால் கங்கையின் ஏக்கம், அவளது அன்னையின் ஏமாளித்தனம் முதலியவை தெளிவாக வெளிப்படுவதை அனுபவித்து மகிழலாம். (44) (பா. வே.) 2. சூழ்மாந்தைக்