பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ {}3 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளை ; கங்கை கெஞ்சொடு உரைப்பது, விளக்கம் : களியானத் தென்னன் - மதக்களிப்புள்ள யானைகளைத் கொண்ட பாண்டியன். இளங்கோ - சிறியவன். எள்ளி இகழ்ந்து, பணி யாரே வணங்காதவர்கள். தம் பார் இழக்க - தமது மாநிலத்தை இழக்க, அணி ஆகம் கைதொழுதேனும் - பாண்டியனது அழகிய மார்பினை மிகவும் பணிவாகத் தொழுது வணங்கிய யானும் இழக்கோ இழக்கவா வேண்டும். கறு மா - நல்ல மணம் உள்ள மாமரம். கொய்தளிர் - கொய்யும் தன்மையுள்ள மாந்தளிர். அன்ன - ஒத்த, காதல் வெறியில் எதுவும் சொல்லத் தோன்றும். சம்பந்தமில் லாத பேச்சுதான் காணப்பெறும். கைதொழுதேனும் இழக்கோ ? . என்ற அடியில் ஏக்க பாவம் துடிப்பதைக் காணலாம். அந்த அடி யைப் பன்முறை சொல்லிப் பார்த்தால் அது வெளிப்படுவது புல குைம். (45)