பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[56; மகளிர் கண்களிலும் முத்துக்கள் முத்தமிழை வளர்த்த பாண்டிய நாடு முத்துக்கும் பெயர் போனது. கொற்கை முத்து உலகப் புகழ் பெற்றது. கொற்கையில் எடுக்கப்பெற்ற முத்துக்களை அக்காலத்தில் அனைவரும் பாராட்டினர்; அந்த முத்துக்கள் அவ்வளவு வளமாக இருந்தன. பாண்டிய நாட்டு முத்துக்கள் யாவும் கொற்கையில்தான் குவிந்துகிடந்தன. வணிகர்கள் அங்குத்தான் அவற்றைக் குவியல் குவியலாகத் திரட்டி வைத்திருந் தனர். உரோமாபுரி, சீன, காச்மீரம், வாரணுசி முதலிய இடங்கட்குக் கொற்கையிலிருந்துதான் முத்துக்கள் அனுப்பப்பெற்றன. கொற்கை தான் முத்து, முத்துதான் கொற்கை என்ற அளவுக்கு இரண்டும் புகழ் பெற்றிருந்தன. 区 艾 X தென்னவன் உலா வருகின்ருன். ஒன்னுரை வென்ற குருதிக் கறை படிந்த வேல் ஒன்று அவன் கையிலிருக்கின்றது. மார்பிலும் குளிர்ந்த சந்தனத்தைப் பூசியுள்ளான். இந்தக் கோலத்தில் அவனைக் கண்ட மங்கை யொருத்தி அவன்மீது ஆராக் காதல் கொள்ளுகின் ருள். வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அவனை கினைந்து கின்று உருகுகின்ருள் கண்ணிர் வடித்த வண்ணமாக இருக்கின் ருள். இங்கிலையை அவளுடைய ஆருயிர்த் தோழி காண்கின்ருள். ஒருபக்கம் வருந்து கி ன் ரு ள் ; மற்ருெரு பக்கம் வியக்கின்ருள். இவளைப்போல் எத்தனைபேர் இங்கிலையில் உள்ளார்களோ என்று சிந்திக்கின்ருள். உடனே தனது நெஞ்சுடன் இவ்வாறு கூறிக் கொள்ளுகின்ருள் : “சிப்பிகள் ஈன்ற ஒளி முத்துக்கள் பாண்டியனுடைய கொற்கை யில் மட்டிலுந்தான் இருக்கும் என்று இதுகாறும் கருதிக்கொண் டிருந்தோம். அந்தக் கருத்தை இனி மாற்றிக்கொள்ளவேண்டியது