பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[62] னேயின் பெருமிதம் சோழனின் செங்கோலாட்சி செவ்வனே நடைபெறுகின்றது. அவனது தோள்கள் கல் மலையையொத்துப் பருத்துத் திண்மை யானவை. அவனது களிற்றியான கிரைகளும் மதமும் கதமும் சிறந்து கிற்கின்றன. இங்கிலையில் யாதோ ஒரு காரணத்தால் பகையரசர் களுடன் போர் கிகழ்கின்றது. கிள்ளியின் யானைப் படைகளும் மாற்ருர் நாட்டை நோக்கிப் புறப்படுகின்றன. அவனது யானைகள் பகைவரின் கொடி கட்டிய மதிலைத் தம் கொம்புகளால் இடித்துத் தொலைக்கின்றன. இச்செய லில் ஒரு யானையின் கொம்புகள் ஒடிந்து போகின்றன. இதலுைம் அந்த யானைக்குச் சீற்றம் தணியவில்லை. அது மதிலே அழித்ததுடன் கில்லாது கோட்டையினுள்ளும் புகுந்து பகை மன்னர்கள்மீது பாய்ந்து அவர்களைத் தளளி அவர்தம் முடிகளை இடறிக்கொண்டே செல்லு கின்றது. இதனால் அதனுடைய கால் நகங்களும் தேய்ந்துபோகின்றன. சோழனின் படைகள் வாகை சூடி ஊர் திரும்புகின்றன. ஊரில் போர் வீரர்களின் மனைவியர் வழிமேல் விழி வைத்துத் தத்தக் கணவன் மாரின் வருகையை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்; அவர்களது கவலையும் கலந்து மறைகின்றது. அரசனும் அந்தப்புரத்திற்குச் சென்று தன் தேவிமாரின் கவலையைப் போக்குகின்ருன். போரில் பெரும் பங்குகொண்டு ,கொம்புகள் முறிந்து கால் நகங்கள் தேய்ந்த யானை மட்டிலும் கூடத்தின் வெளிப்புறத்தில் கிற்கின்றது. இதனைக் கவிஞர் காண்கின்ருர். இவ்வாறு சிந்திக்கின்ருர்: " அட பாவமே, போரில் பங்கு கொண்ட வீரர்கள் யாவரும் வீட்டையடைந்து இன்புற்றிருக்க, இஃது இங்கேகி ற்கின்றதே. ஒகோ, கொம்பொடிந்து நகங்களும் தேய்ந்த நிலையில் பிடியான கண்டால் தன்னை எளிமையாகக் கருதுமே என்று நாணித்தான் இங்ங்ணம் கிற்கின்றது போலும்!” ! 0