பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辑本6 முத்தொள்ளாயிர விளக்கம் இந்தச் சிந்தனை ஓர் அழகிய பாடலாக வடிவங் கொள்ளு கின்றது. இனி, பாடலைப் பார்ப்போம்: கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர் முடியிடறித் தேய்ந்த நகமும்- பிடிமுன்பு பொல்லாமை தானிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. இது யானைமறம் கூறும் பாடல் , யானையின் பெருமிதத்தைக் காட்டுவது. விளக்கம்: கொடியதில் கொடி கட்டிய பகைவரின் கல் மதில்மேல்; பாய்ந்து இற்ற கோடும் பாய்ந்து அது காரணமாக முறிந்த கொம்புகளும், அரசர் முடி இடறித் தேய்க்த நகமும் போர்களத்தில் பகை வேந்தரின் முடி கன இடறியதால் தேய்ந்துபோன நகங்களும்; பிடி முன்பு பொல்லாமை காணி - இவை காரணமாகப் பெண்யானையின் முன்பு அழகழிந்து தோன்றும் பொல்லாமைக்கு வெட்கி; புறங்கடை கின்றதே கூடத்திற்கு வெளியே கின்றது; கல்லார் தோள் கிள்ளி-கல்லையொத்த தோளினையுடைய சோழனது; களிறு - ஆண்யானே. - - இயல்பாகப் புறங்கடையில் கிற்கும் களிற்றினைக் கவிஞர் தன் கருத்தினை ஏற்றிக்கூறுவது, தற்குறிப்பேற்ற அணி. பெருமிதத்தையும் காதலையும் இழிவில் வைத்துச் சொல்லுவதில் நகைச்சுவை தோன்றுகின்றது. யானையின் பெருமிதத்தையும் சோழ னது அழகினையும் ஒன்ருகப் பாராட்டுகின்றது. இப் பாடல். (5)