பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[63] நால்வாயின் நான்குகால் பாய்ச்சல் liண்டைக்காலத்தில் அடிக்கடிப் போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இக்காலத்தில் தரையில் கடக்கும் போர் களில் டாங்கிப்படை (Tank) பயன் பட்டுவருவதைப் போலவே, அக்காலத்தில் யானைப்படை பயன்பட்டு வந்தது. அக்காலத்தில் பெரும்பாலும் தற்காப்புபற்றியே போர் நிகழ்ந்ததால் மக்கள் அதனைப் பாராட்டி வந்தனர். போருக்குரிய யானையை மிக அதிகமாகப் பாராட்டி,மகிழ்ந்தனர். இலக்கியங்களிலும் யானைப் போரைப்பற்றிக் கவிஞர்கள் சிறப்பாக வருணிக்கும் வழக்கத்தைக காணலாம். போர் யானையின் கடை அவர்களது கண்ணையும் கவர்ந்தது ; கருத்தையும் ஈர்த்தது. கவிஞர் ஒருவர் சோழ வேந்தனது யானையின் வேகத்தைக் கண்டு அனுபவிக்கின்ருர், கவிஞரின் கற்பனையுள்ளத்தில் நிகழும் யானையின் நடையைக் காண்போம். உறந்தையர் கோனின் யானை உறையூரில் கின்று ஒரு காலை ஒரே எட்டில் காஞ்சிபுரத்தில் வைக்கின்றது ; அதிலிருந்து அடுத்த அடியை வடக்கேயுள்ள உச்சயினி நகரத்தில் வைக்கின்றது. அதன் பிறகு அது தெற்கு நோக்கித் திரும்பிவிடுகின்றது. ஒரு காலை இலங்கையில் வைத்து மற்ருெரு காலே உறையூரிலேயே வைக்கத் தூக்கிக்கொண்டு கிற்கின்றது. சோழ நாட்டில் போர் தொடங்கிவிட்டால் வேந்தன் வடபுலத்தில் உச்சயினிவரை சென்று வென்று திரும்புவான்; பிறகு அவன் தெற்கே திரும்பி ஈழம்வரை சென்று வென்று திரும்புவது வழக்கம். இதைக் காணும் கவிஞர் சோழனின் வெற்றியை யானையின் கடையில் வைத்து ஒரு வீரன் மற்ருெரு வீரனிடம் விளம்பும் பாணியில் காட்டுகின்ருர்.