பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[72] இது நீதியா? ஆத்திமால் சூடிய சோழன் உலா வருகின்றன். கங்கை யொருத்தி அவன்மீது காதலாகிக் கசிந்துருகுகின்ருள். ஊனும் உறக்கமுமின்றி உடல் மெலிகின்ருள். தோளும் மெலிகின்றது. காதல் வெறியில் தோழியிடம் இவ்வாறு பேசுகின்ருள் : " தோழி, வளவன் உலாப்போங்தான். அவன் எழில் கலத்தை என்னுடைய கண்கள் கண்டு களித்தன. என்னுடைய கெஞ்சமும் அவளுேடு கலந்து அனுபவித்தது; ஒன்றிவிட்டது என்று கூடச் சொல்லலம். எண்ணிப் பார்த்தால் இவை இரண்டுமே குற்றம் இழைத்தாகக் கொள்ளலாம். என்னுடைய தோள்களோ ஒரு குற்ற மும் புரியவில்லை. குற்றத்திற்காகத் தண்டனை விதிப்பது முறை. ஆனல் குற்றம் செய்யாதவர்களை ஒறுப்பது முறையாகுமா? ஒரு குற்றமும் அறியாத எனது தோளைத் தண்டிப்பது திேயா? உறங்தையார் கோனுக்கு முறையல்லாதனவெல்லாம் முறையாக அமையும் போலும் வல்லான் வகுத்ததே வாய்க்காலல்லவா?" என்கின்ருள். தலைவியின் உணர்ச்சிக்குக் கவிஞர் இவ்வாறு வடிவம் அமைக் கின்ருர்: - கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சந் தண்டப் படுவ தடமென்ருேள்-கண்டா யுலாஅ மறுகி லுறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு.