பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 63 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளை ; தலைவி தோழியிடம் உரைப்பது. விணக்கம் : புனல் காடன் - காவிரியின் புனல் பாயும் சோழ நாட்டு அரசன். வெளவிஞன் - கைப்பற்றிக்கொண்டான்; கொள்ளைகொண்டு போனன். என்னே - என்ன வியப்பு. அரவு அகல் அல்குலாய் - பாம்பினது அகன்ற படத்தின் புறத்தைப் போலத் தொடைகளின் மேற்புறம் அழகாக அமையப்பெற்ற தோழியே. அல்குல் - தொடைக்குமேலும் இடைக்குக் கீழு முள்ள பகுதி. அதன் மேற்பகுதி சுருங்குதலின் சிறுத்தலின் அல்குல் எனப்பட்டது. அல்குதல்-சுருங்குதல். தொடைக்கும் இடைக்கும் நடுவிலுள்ள பகுதியின் பின் பக்கமே - முதுகிற்குக் கீழுள்ள பகுதியே - அல்குல் எனப் படும். அல்குல் - பெண்குறி என்றது. பிற்கால வழக்கு ஆறில் ஒன்று அன்ருே புரவலர் கொள்ளும் பொருள் - மன்னனுக்குச் சேரவேண்டிய வரிப் பணம் ஆறில் ஒரு பகுதிதானே. புரவலர் அரசர். ஆத்திரமும் அதிலிருந்து எழுந்த நகையும் கலந்த பாவம் பாட்டில் கிழலிடுகின்றது. வெறிகொண்ட நிலையில் முரணுன பாவங்கள் கலத்தல் இயல்புதானே. (16)