பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 83 Rx வஞ்சி நகரின் வளம் 1iண்டை காலத்துத் தமிழ் மறவர்கட்கு மது அருந்துவது தண் னிர் அருந்துவதுபோல, படைவீரர்கட்கு மது வழங்குவதே ஒரு மரபாக வந்திருக்கின்றது. மறவர்கள் ஒருவருக்கொருவர் மதுவைப் பரிமாறி மரியாதை செய்துகொள்வது வழக்கம். மதுவை வாங்கிக் கொள்வோர் மிகவும் பக்தியாக ஏற்றுக்கொள்வர். இப்பொழுதும் இரண்டு போர்வீரர்கள் பிராந்தி போன்ற மதுவைப் பருகும்பொழுது ஒருவர் கிண்ணத்தை மற்ளுெருவல் கிண்ணத்துடன் மெதுவாக மோதி ஓசை செய்வதைக் காணலாம். ஒருவரது கிண்ணத்திலிருந்து மற்றவரது கிண்ணத்திற்கு மதுவை ஊற்றும் முற்கால வழக்கமே இப்பொழுது கிண்ணங்களைத் தட்டி ஒலிக்கும் சடங்காக மாறி யிருக்கின்றது : மதுவை உண்பதற்கு முன்னர் அதில் சிறிதளவு விரல்களிளுல் எடுத்து கிலத்தில் உதிர்த்துவிட்டு-இது கிலமகட்கு உவந்து வழங்கும் படைப்புப்போலும் - அதன் பின்னரே மதுவைத் தாம் அருந்துவர். வஞ்சிமா நகரின் தெருக்களில் கள் விற்போர் ஏராள மாகச் சூழ்ந்திருக்கின்றனர். அவர்களிடம் கள்ளை வாங்கி மேற் கூறிய வழக்கப்படி பூமியில் தெளிக்கும் கள்ளின் துணிகள் சேர்ந்து வெள்ளம்போல் பாய்கின்றன. அத்தெருக்களின் வழியாகக் களிறு கள் கூட்டம் கூட்டமாக வருங்கால் இந்தக் கள் வெள்ளத்தை மிதித்தலிளுல் தெருவெல்லாம் சேருகிவிடுகின்றது. எங்கும் ஒரே சேறுமயம்! இதல்ை மறவர்களின் கூட்டமும், கள்ளின் மிகுதியும், யானைகளின் பெருக்கமும் கிறைந்த வஞ்சிமா நகரின் வளன் தெளி வாகின்றது. மேற்கூறிய காட்சியைத் தமது கவிதையில் கிறுத்தி வஞ்சியின் வளத்தை விளக்குகின்ருர் கவிஞர். அவருடைய பாடல் இது :