பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 முத்தொள்ளாயிர விளக்கம் இந்தச் செய்தி கவிஞர் காதுக்கு எட்டுகின்றது. கிகழ்ச்சிக்கு அழகிய வடிவங்கொடுக்க எண்ணுகின்றது அவரது கவிதையுள்ளம், உடனே பாடலும் உருப்பெற்று இந்த வடிவம் கொள்ளுகின்றது : பல்யான மன்னர் படுதிறை தந்துய்மின் மல்ல னெடுமதில் வாங்குவிற் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானுேரும் வானவன் வில்லெழுதி வாழ்வர் விசும்பு. வில்லவனின் தானத் தலைவன் மாற்ருர் முன்னின்று திறை தக்துய்யுமாறு நெடுமொழி கூறுவது. விளக்கம் : பல்யான மன்னர் - பல யானைப் படைகளையுடைய மன்னர் காள் (அண்மை விளி). படுதிறை - விதிக்கப்பெறும் கப்பப் பொருளே, தந்து உய்ம்மின் செலுத்திப் பிழையுங்கள். மல்லல் நெடுமதில் - பலமாகக் கட்டிய, உயர்ந்தும் நீண்டுமுள்ள மதிற்கவர்களில். வாங்குவில் பூட்டுமின் - வளைந்த வில்லைப் பூட்டிய மாதிரி ஓவியம் எழுதுவியுங்கள். வள்ளிதழ் வாடாத வாளுேரும் வளப்பமான இதழ்கள் வாடாத மாலையை யணிந்த தேவர்களும், வானவன் - சேரன். வில் சேரனது கொடியிலுள்ள சின்னம். விசும்பு . வானம். இயல்பாக வானத்தில் வண்ண வில் காணப்படுவதை விண் னேர்கள் சேரனுக்கு அடங்கியதாகக் கூறுவது ' தற்குறிப்பேற்றம் , விண்ணவரும் வானவனுக்கு அஞ்சி வில்லெழுதி வாழ் கின்றனர். நீவிர் எம்மாத்திரம் ? என்ற தானத் தலைவனின் குறிப்பு பெருமிதச் சுவை கிறைந்தது. (3) (பா. வே.) 2. மன்னர் என்பது மன்னீர் என்றிருப்பின் பொருந்தும்.