பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2 முத்தொள்ளாயிர விளககம் இது பகைப்புலம் பழித்தல் ; கோதையின் கோபத்திற்கு ஆளானவர்களுடைய காட்டின் கிலேயைக் கூறுவது. விளக்கம் வேர் அறுகை ஆன அறுகம் புல் கீழே வேர் ஓடி பம்பி . பரவி கெருங்கி வளர்ந்து, சுரை பேய்ச்சுரைக்காய்க் கொடி வேளை - தை மாதத்தில் அதிகமாக வளரும் வேளைச் செடி முகை அவிழ் தார்க் கோதை. அப்பொழுதுதான் விரிந்த மொட்டுக்களாலான மாலையைச் சூடிய சேரன். கோதை - சேரன். முசிறியார் கோமான் - முசிறி என்ற துறைமுகப் பட்டினத்தின் தலைவனுடைய ககையிலை வேல்காய்த்தினர் நாடு - ஒளி பொருக்திய இலைபோன்ற வேலைப் போருக்குத் தூண்டிய பகைவருடைய கரடு. - - முசிறி சேரநாட்டின் பெரிய துறைமுகப் பட்டினம். இது சுள்ளியம் பேரியாறு கடலொடு கலக்குமிடத்தில் உள்ளது. முற்காலத்தில் (கிறித்துவின் காலத்திற்கு முன்பே) மேற்புல க்ாடுகளின் மரக்கலங்கள் மிளகு முதலியன கொள்ளற்கு மிகுதியாகத் தங்கின இடம் இது. செரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்னுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னுெடு வந்து கறியொடு பெயரும் வனங்கெழு முசிறி : என்ற அகப்பட்டடிகளால் இதனை அறியலாம். பெரிபுளுசு, தாலமி, பிளைணி முதலிய மேற்புல யாத்திரிகருடைய குறிப்புக்களும் இதனை வலியுறுத்து கின்றன. இப்பட்டினத்தைப் பாண்டியன் ஒருவன் வளைத்துப் பெரும் போர் புரிந்து அதன்கண் இருந்த சேரர்க்குரிய அழகிய உருவச் சிலேயைக் கவர்ந்து சென்றனன் என்பது மேற் கூறிய அகப்பாட்டின், வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய நெடுதல் யானை அடுபோர்ச் செழியன் என்ற அடிகளால் அறியப்பெறும். (7)

  • அகம் . 129,