பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[105] பெட்டிப் பாம்பாகிவிட்டாளே ! இவருக்கருகில் நெடுஞ்சாலையோரத்தில் ஓர் அழகிய பூஞ் சோலை. பருவம் வந்த மகளிர் பலர் அதில் வளையாடிக்கொண் டிருக்கின்றனர். அவர்களுள் ஒருத்தி உலாவருங்கால் சேரனைக் கண்டு அவன்மீது காதல் கொண்டவள். அதல்ை அவளது உடலும் மெலிவுற்றிருந்தது. அங்கங்கை மன்னன்பால் கொண்டிருந்த காதலை மற்ற மகளிர் ஓரளவு அறிவர். அவர்கள் யாவரும் மன்னனுக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டிப் பரிகாசம் செய் கின்றனர். இவளும் அவர்களிடம் தன் காதலைப் புலப்படுத்திக் கொள்ளும் வண்ணம் பேசுகின்ருள்:

  • யாரோ குடநாட்டு மன்னனும் ! அவன் வரட்டும் ஒரு கை பார்க்கின்றேன். அந்த வஞ்சியான் வரட்டும் ! என் வெஞ்சினத்தைக் காட்டுகின்றேன். ஐயா, வீேர் என்மீது காதல் கொண்டது உண்மையா? என்று நேரிலேயே கேட்டுவிடுகின்றேன். அப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிடும் !" என்கின்ருள்.

இவ்வாறு அவள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாகச் சேரனே அருகிலுள்ள சாலை வழி யாகக் குதிரையின்மீது வந்துகொண்டிருக்கின்றன். அவனை அந்த மகளிர் அனைவரும் காண்கின்றனர். வாய்க்கு வந்தபடியெல்லாம் வீம்பு பேசிக்கொண்டிருந்த கங்கை அவனைக் காணவும் பெட்டிப் பாம்பாகி விடுகின்ருள் தவயோகிபோல் மெளனமாகின்ருள். அவள் காட்டிய சினம் காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சுபோல் பறந்துவிடுகின்றது. காதலாகிக் கசிந்துருகுகின்ருள் கண்களில் நீர் பெருகி கிற்கின்றது. இதை அவளது தோழியர் யாவரும் காண்கின்றனர் ; வியப் படைகின்றனர். ' எவ்வளவு விரைவாக மனம் மாறிவிட்டது ' என்று மூக்கின்மேல் விரலை வைக்கின்றனர்.