பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியனின் ஆன * 5 பாடல் இது : நேமி நிமிர்தோ னிலவுத்தார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவல னுணையால் : ஏமி மணிப்பூ விைமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள். இது திறைபற்றிய பாடல். விகக்கம் நேமி தோள் வளையம், பாண்டியனின் தோள் மிகப் பெரியது. அதுகாரணமாகத் தோன் வளையம் கிமிரப் பார்க்கின்றது. கேமி - பூமி ; கிமிர்த்தல் . தாங்குதல்; பூமியைத் தாங்கும் தோள்கள் என்றும் பொருள் கொள்ளலாம். நிலவுதார் . ஒளிவிடும் வெள்ளிய முத்தாரம். தேர்ந்தெடுத்த பாண்டிய காட்டின் முத்துக்களாலாகிய ஆரத்தை மார்பில் அணிந்திருக்கின்ருன், காமர் நெடுங்குடை - அழகிய அகன்ற வெண் கொற்றக் கொடை. இது நாட்டைப் பாதுகாக்கும் முறையை எடுத்துக் காட்டும் ஓர் அடையாளமாகும். இந்தக் குடையைப்பற்றிப் பலவாருகச் சிறப்பித்துப் பாடுவது இலக்கிய மரபு. காவலன் - காவல் செய்கின்றவன்; அரசன். ஏம மணிப்பூண் - பொன்குலும் இரத்தினத்தாலும் செய்த அணி கலன், ஏமம் - பொன். மணி - இரத்தினம். இமையார் - தேவர்கள். திருந்து அடி - நல்ல பூங்குறிகள் யாவும் அமைந்த அடி. இயல்பாகவே கால் கிலம் தோயாத தேவர்கள் பாண்டியனின் ஆனைக்கு அஞ்சித்தான் கிலத்தில் கால வைத்திலர் என்று தன் உளக் குறிப்பை ஏற்றிப் பேசுகின்ருர் கவிஞர். இதனைத் தற்குறிப் பேற்ற அணி ' என வழங்குவர் இலககண நூலார். தேவர்களே இவ்வளவு எச்சரிக்கையாக இருப்பார்களாயின் பூமியிலுள்ள அரசர்களைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? கவிதை யில் பெருமிதச் சுவை காணப்படுகின்றது. ஆணையால் ' என்ற சொல்லின்மூலம் இச்சுவை வெளியாகின்றது. படைத்தலைவன் ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசும் பாணி இது. பாடலைப் பல முறைப் பாடிப் பாடி அனுபவித்தால் இப்பாணியையும் காணலாம்; சுவையையும் வெளிப்படச் செய்யலாம். (3) (பா. வே.) 2. கிமர்தோள். 9. தீவ.