பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வெற்றிமுரசு விளைவித்த செயல் இடியைப் போலவே இடி முரசம் ஒலிக்க. ஆர்ப்ப முழங்க. அரவு - பாம்பு. உறழ்ந்து ஒத்து. அதாவது மின்னலையும் இடியையும் கேட்ட பாம்பு புற் றுக்குள் புற்ருய்ச் செறிகின்றது என்றவாறு. ஆமா - ஆப்போலும் மா காட்டுப் பசு, உகளும் . தாவி ஓடித் திரியும். அணிவரை - அழகிய மலை. ஆமா உகளும் மணிவரை என்று பிரித்து மாணிக்கக் கற்கள் உள்ள மலை என்று கொள்ளலும் பொருந்தும், வயிறு எரிய வயிறு கனல. வேம் - வேகும் ; உள்ளம் கொதிக்கும். ஆல் - அசை, பகையரசர்கள் வயிறு எரிய மனம் புழுங்குவர். 'வேமால் வயி றெரிய வேந்து ' என்பதில் அச்சச் சுவை பொங்கி வழிகின்றது. முரசொலி கேட்டுப் பகையரசு அணிவரையின் அப்புறம் சென்றது என்ற குறிப்பால் மாற்றரசரின் எயிலே மாறன் படை கைப் பற்றியது என்பது புலனுகின்றது. (5)