பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ாண்டியனுக்குப் பாமாலை 45 தணிப்பசுங் கடப்பந் தாருந் தண்டையந் தாளு நாளுங் கணிப்பருஞ் செந்தி லாயென் கருத்தைவிட் டகன்றி டாயே, ! முருகன் வழிபாட்டில் அருணகிரியாரின் பாடல்கள் மிகவும் குறிப்பிடத் தக்கவை. முத்தொள்ளாயிர ஆசிரியர் முருகன் வழிபாட்டில் ஈடுபட்டவர் : நாடோறும் கந்தனே வழிபடுகின்றவர். முருகனுக்குக் கடம்பம் பூ சிறந்ததாதலின் அப் பூவை மாலையாகத் தொடுத்து அவனுக்கு அணிவார் , அம்மலர்களால் அருச்சனை செய்து அவனைத் தொழு தேத்துவார். இவ்வாறு முருகனது அருளில் மூழ்கி யிருக்கும் கவிஞர் ஒரு சமயம் பாண்டியனை வாழ்த்த நேரிடுகின்றது. அவனே எழிலுடன் போற்ற எண்ணுகின்ருர். பகைவரைத் தொலைத்து வாகை சூடி வெற்றி வேலைக் கையில் தாங்கியிருக்கும் பாண்டியன், இரு வினைகளையும் கெடுத்து தலைமீ துள்ள அயன் கையெழுத்தையும் அழிக்கவல்ல முருகளுகத் தோன்று கின்ருன். கந்தனுக்குக் கடம்ப மாலே சூட்டுகின்ருேம், தென்ன வனுக்கு என்ன மாலை சூட்டுவது? என்று யோசிக்கின்ருர் கவிஞர். தார்மாறனுக்குத் தமிழ் மாலை சூட்டுவோம்' என்று முடிவு கட்டுகின் ருர், தாம் தொடுத்து அணியும் கடம்பம் பூ மாலையை முருகன் மகிழ்ந் தேற்றுக் கொள்வதைப்போலவே, முத்தமிழைப் போற்றி வளர்க்கும் பாண்டியன் தமது பாமாலையை விரும்பி யேற்றுக் கொள்வான் என்றும் கருதுகின்ருர் , கடம்பம்பூ மாலை கந்தனுக்கே சிறந்தாற் போல, தமது தமிழ்ப் பாமாலை தென்னவனுக்கே சாலச் சிறந்தது என்று எண்ணுகின்ருர். இந்த எண்ணம் அவரது உள்ளத்தில் ஓர் அழகிய பா வடிவம் கொள்ளுகின்றது.

சுவாமிகாத தேசிகர் திருச்செக்திற் கலம்பகம் செய் - 88