பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முத்தொள்ளாயிர விளக்கம் இனி, பாடலைப் பார்ப்போம்: மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளுங் கடம்பம்யூக் கொண்டேத்தி யற்ருல் - தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிறைகதிர்வேல் மாறன. - இன்தமிழால் யாம்பாடும் பாட்டு. இது பாண்டியனது புகழ் கூறுவது. இதனை அடுத்து வரும் ஐந்து பாடல்களும் புகழைப்பற்றியனவே. விளக்கம் : மடங்கா முடிவே இல்லாத மைந்தன . முருகனை. ஏத்தி அற்ருல் பாடிப் புகழ்ந்தது மாதிரிதான், தொடங்கு அமருள் பகைவர் களுடன் தொடங்கும் போரில், கின்றிலங்கு வென்றி. கிலேபெற்று விளங் கும் வெற்றியைத் தரக்கூடிய கிறைகதிர்வேல் மாறன் - போர்க்களம் எங்கும் நிறைந்த கூரிய வேற்படையை யுடைய பாண்டியன். மாறன் - பாண்டியன். பாண்டியனைப் பாமாலையால்போற்றுவது முருகனைப் பூமாலையால் வழிபடுவ தற்கொப்பாகும் என்பது கருத்து. . இறை வழிபாட்டில் பண்பட்டுத் திளேக்கும் கவிஞரின் உள்ளம் முறை செய்து காப்பாற்றும் மாறனை மக்கட்கு இறை என கினைத்துப் போற்றுகின்றது. (18)