பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$本 முத்தொள்ளாயிர விளக்கம் அவனை எப்படித் துணிந்து எதிர்க்க முடியும்? ஆகவே, அனைவரும் அவனுடன் உறவுபூண்டே ஒழுகுகின்றனர் பணிந்தே கடக் கின்றனர். இங்ங்னம் பாண்டியனது வளனையும் வீரத்தையும் புகழையும் கூறும் கவிஞரின் பாடல் இது : பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும்-சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேற் தலைபடுப தார்வேந்தர் மார்பு. இது மாறனின் வளம், வீரம், புகழ் ஆகியவற்றைக் கூறுவது. விளக்கம் : பார் - பூமி. செம்பொன் - தங்கம். பதிபடுப முத்தமிழ் - ஊர்களில் காணக்கிடப்பது முத்தமிழைப் பரிபாலிப்பது. நீர்படுப - கடலில் காணக்கிடப்பது. கித்திலம் முத்து. சாரல் மலைபடுப யானை - வளமான மலைச்சாரல்களில் காண்பது யானை கிரைகள். கூர்வேல் தலைபடுப - கூர்மை யான வேல் முனையிற் காண்பது. தார் வேந்தர் மார்பு - பகை மன்னர்களின் மாலை யணிந்த மார்பு, தார் . மாலை. . - பாண்டியனது வீரவேல் பகைமன்னர்களின் மார்பில் ஊடுருவி கிற்கும் காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்துகின்றர் கவிஞர். (20)