பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{22} பகைவரும் பாம்பும் Lifம்பின் தலையில் மணி உண்டாகும் என்று சொல்வது இலக் கிய மரபு. அதனை காகரத்தினம் ' என்று வழங்குவர். பாம்பு மின் னலைக் கண்டு கடுங்கும். ஆகவே, அது கார் காலத்தைக் கண்ட வுடன் புற்றினை நாடும். வானத்திலிருந்து இடியோசை கேட்டால் அதன் உயிர் ஊசலாடும். இடியைக் கேட்டால் அவ்வளவு அச்சம் அதற்கு. இங்ங்ணமே பகைவர்கள் பாண்டியனைக் கண்டு அஞ்சுகின் றனர். அவனது வேலைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றனர். அவர்கள் உறங்கும்பொழுதும் வேலினைக் கனவில் கண்டு நடுங்கு கின்றனர். பகைவருக்குப் பாம்பை உவமையாக்கி, இடிக்கு அவனது வேலை உவமையாக்கிப் பாண்டியனது வீரத்தைப் பாட்டில் புகழ்ந்து பேசுகின்ருர் கவிஞர். இதோ பாடல்: அருமணி யைந்தலை யாடரவம் வானத் துருமேற்றை யஞ்சி யொளிக்கும்-செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. இது பகைவரின் நிலையைப் பகர்ந்து பாண்டியனது வீரத்தைப் புகழ்வது. விளக்கம்: அருமணி - பெருமையாகப் பேசப் பெறும் காகரத்தினம். ஐந்தலை ஐந்து தலையையுடைய ஆடரவம் - படம் எடுத்து ஆடும் பாம்பு. அரவம் - பாம்பு. உருமேற்றை அஞ்சி . இடிக்கு முன்னதாகத் தோன்றும் மின்னலைக் கண்டு பயப்பட்டு. செரு மிகுதோள் - மற்போரினல் திடங் கொண்ட திரண்ட தோளையுடைய. மாறன் - பாண்டியன். சினவேல் - அச் சுறுத்துவது போல் ஒளிரும் வேல். கனவுமே - கனவில் கண்டு கண்டு அஞ்சுவர். அங்கண்மா ஞாலத்து அரசு - அழகிய பரந்த கிலத்திலுள்ள மன்னர்கள். புற்றினுள் உறங்கும் பாம்பு இடி முழக்கத்தை எண்ணி எண்ணி நடுங்குவது போல் பகைவர்கள் கனவிலும் பாண்டியனதுசின வேலைக் கண்டு கண்டு அஞ்சுவார்கள் என்பது குறிப்பு. (21) (பா - வே.) 2. யந்தல் ; 11. சினவே ; 12. ல கவுமேல்.