பக்கம்:முந்நீர் விழா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

முந்நீர் விழா

 கேட்ட அவர்கள், "ஆம், உங்கள் புலமையையும் பெருமையையும் எண்ணியே அந்தச் செய் நன்றாக விளைகிறது. உங்கள் அதிருஷ்டமே அதிருஷ்டம்!" என்று கூறி மகிழ்ந்தார்கள். கரும்பு ஆலையில் ஆடுவது சர்க்கரை உண்டாக என்றும், கம்பையூரில் உள்ள கோணச் செய் நன்றாக விளைவது சர்க்கரைப் புலவருக்காக என்றும் அந்த இரு சொல் அலங்காரத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

நெட்டிமாலைப் புலவர் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூருக்குச் சென்று வழி பட்டார். அப் பெருமானைத் துதித்து, 'திருச்செந்தூர்க் கோவை' என்ற நூலைப் பாடினர்.

சேதுபதி மன்னரிடம் அமைச்சராக இருந்த தாமோதரம்பிள்ளை என்பவர் சர்க்கரைப் புலவரிடம் பேரன்பு பூண்டவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் புலவர் கற்றமையால் அவருக்குச் சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஆழ்ந்த தேர்ச்சி இருந்தது. தாமோதரம் பிள்ளை சைவ சித்தாந்தத்தில் பற்றுள்ளவர். புலவருடைய சித்தாந்தப் புலமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவர் அவா. சித்தாந்த நூல் ஒன்றைப் பாட வேண்டும் என்றோ, பழைய சித்தாந்த நூல் ஒன்றுக்கு உரை எழுத வேண்டுமென்றோ அவர் கேட்டிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

"வேதாந்த சூளாமணி என்ற வேதாந்த நூலுக்குச் சித்தாந்த பரமாக ஓர் உரை எழுதுங்கள்” என்று. அமைச்சர் சொன்னர். நூலின் பெயரே வேதாந்த சூளாமணி; அது வேதாந்தக் கருத்தைத் தன்பால் கொண்டது என்பதை அப் பெயரே தெரிவிக்கும், அப்படியிருக்க, சித்தாந்தக் கருத்துக்கு இணங்க அதற்கு உரை எழுதுவதென்பது எளிய செயலன்று. வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/111&oldid=1214815" இலிருந்து மீள்விக்கப்பட்டது