பக்கம்:முந்நீர் விழா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

53

 பொருட்டு எதையும் செய்வார் என்பது முழு உண்மையா, அல்லது அரைகுறை உண்மையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினார்கள்.

சடையனார் அந்தப் புலவர்களை வரவேற்று உபசரித்தார். விருந்து வழங்கினார். தமிழ் நூல்களின் நயங்குறித்துப் பேசி அளவளாவினார். புலவர்கள் தாம் அவரைப்பற்றிப் பாடியிருந்த கவிகளைச் சொன்னார்கள். சடையனார் அவற்றைக் கேட்டு மகிழ்ச்சி பெற்றார், இப்படி அளவளாவி வருகையில் புலவரில் ஒருவர் பேச்சினிடையே, "தங்களிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

"விண்ணப்பம் என்ற வார்த்தை வேண்டாம். தடையின்றி மனம் திறந்து சொல்லுங்கள்" என்றார் வள்ளல்.

"ஒருகால் நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னைப் பைத்தியம் என்று எண்ணினாலும் எண்ணலாம்; அல்லது சினம் கொண்டாலும் கொள்ளலாம்."

"இப்படி எல்லாம் நீங்கள் நினைப்பதற்குக் காரணமே இல்லை. அறிவும் பண்பும் மிக்க புலவர்கள் தகாதது எதையும் சொல்ல மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆதலால், நீங்கள் எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்.”

"நான் கேட்பது வாங்கிக் கொள்ளும் பொருள் அன்று. ஒரு விரதத்தரல் நான் அவதியுறுகிறேன். அந்த விரதத்தை நிறைவேற்ற முடியாமல் அல்லற்படுகிறேன்.”

"என்ன விரதம் அது?”

"உணவு சம்பந்தமான விரதம் அது. சிலர் தரையை மெழுகி, அதன்மேல் சோறு வைத்துச் சாப்பிடுவார்கள். அது ஒருவகை விரதம். அது போன்றது இது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/62&oldid=1207545" இலிருந்து மீள்விக்கப்பட்டது