பக்கம்:முந்நீர் விழா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அமைச்சர் முத்திருளப்பர்
1

ராமநாதபுரம் மன்னர்கள் சேதுவாகிய திரு வணக்குக் காவலர்கள் ஆதலின் அவர்களைச் சேதுபதி என்றும், சேது காவலர் என்றும் சொல்வார்கள். இராமபிரானால் சேது காவலராக நியமிக்கப்பெற்ற மாவீர ருடைய மரபு என்று அம்மன்னர்களைச் சொல்வதுண்டு. அவர்கள் தமிழ்ப் புலவர் வாழ்வுக்கு வளமும் நாவுக்கு வீறும் ஏறச் செய்தவர்கள். சேதுபதி மன்னர்களிற் சிலர் புலமை உடையவராகவும் இருந்திருக்கிறார்கள். சேது சம்ஸ்தானத்தில் புலவர்களாக இருந்த பெரியோர் பலர்.

அந்த நாட்டில் அமைச்சராக இருந்து நற்செயல் பல புரிந்தும், அரசர்கள் பெயரை எங்கும் பரவச் செய்தும், வீரச் செயல் காட்டியும் புகழ்பெற்ற பெரு மக்கள் பலர். பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இராமநாதபுர மன்னராக இருந்தவர் முத்து ராமலிங்க சேதுபதி என்பவர். அவருடைய மந்திரியாக இருந்தவர் முத்திருளப்ப பிள்ளை என்னும் மதியூகி. அவருடைய மதித் திறமையையும் கொடைத் தன்மை யையும் நற்செயல்களையும் புலவர்கள் பாராட்டிப் பாடியிருக்கிறார்கள்.

ஒரு முறை ஒரு புலவர் முத்திருளப்ப பிள்ளைக்கு ஏதோ ஒரு பொருள் வேண்டுமென்று செய்யுளாக ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/97&oldid=1207788" இலிருந்து மீள்விக்கப்பட்டது