84
முன்னும் பின்னும்
நூல் : கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம் (1930), பாடல் : 12, பக்கம்: 10
ஏறாத மலைதனிலே... வெகு
ஜோரான கௌதாரிரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணதோம் தாளம் போடுதையா.
படம் : தூக்கு தூக்கி, பாடலாசிரியர் : அ.மருதகாசி, பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன், இசை : ஜி. ராமனாதன்.
🞸
நம்பாதே
உன்னையே நம்பாதே கண்ணையும் நம்பாதே
ஒருநாளும் மோசம் போகாதே
(நம்பாதே)
படம் : நல்லவன் (1955), பாடல் : தஞ்சை ராமையாதாஸ், இசை : எம்.எஸ். ஞானமணி.
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மையில்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது.
படம் : நினைத்ததை முடிப்பவன் (1975), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.
🞸
கண்ணை மட்டும் நம்பாதே!
கருத்தை மட்டும் இழக்காதே!
படம் : மனமுள்ள மறுதாரம் (1958), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : ஜிக்கி, இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்.
🞸
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயரும்
– ஒளவையார்
நீர் இருந்தா ஏர் இருக்கும்
ஏர் இருந்தா ஊர் இருக்கும்
ஊர் இருந்தா உலகத்திலே