பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΙ

வாழவைக்கும் பரமேசுவரன் அல்லவா அவன்? மற்ருெரு இராகமாலிகை உருவமும் அருவமுமான பரம்பொருள் உல கம் உய்வதற்காகக் குழந்தை முருகளுக வந்து உதித்துச் செய் கின் த லீலைகளை எடுத்துக் கூறுவதாகும்.

பாடுவித்தால் யாரொருவர் பாடாதாரே என்ற மனப்பாங் త உருவான இப்பாடல்களே கருநாடக இசையில் சிறந்து விள்ங்குகின்ற வித்வான்கள் பலரும் மதித்துப் போற்றி எனக்கு ஊக்கம் அளிப்பதானது அருள்வாரிதியான அவனு டைய கருணை என்றே நான் கருதுகின்றேன். இவர்கள் அனை வருக்கும் என் உளங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னல் வெளியான என் இசை நூல்களிலிருந்து சில பாடல்களை இந்நூலில் சேர்த்துக்கொள்ள அன்புடன் அனு மதி தந்த அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திற்கும், தமிழிசைச் சங்கத்திற்கும் என் நன்றி உரியது.

சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய அய்யர் அவர்கள் இந் நூலுக்கு ஓர் அரிய முகவுரை வழங்கியுள்ளார்கள். அதற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலுக்கு அன்புடன் அணிந்துரை வழங்கியுள்ள சங் கீத கலாநிதி செம்மங்குடி சீநிவாச அய்யர் அவர்களுக்கும் பேரர்சிரியர்' பி. ஸாம்பமூர்த்தி அவர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றி.

இத்தொகுதியை வெளியிடும் செலவிற்காக ரூபாய் 923

மானியமாக வழங்கிய தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்திற்கும், ரூபர்ய் ஆயிரம் வழங்கிய தமிழ் இசைச் சங்கத்திற்கும் என் நன்றி என்றும் உரியது. -