பக்கம்:முருகன் காட்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள்

காட்டும் முருகன்

பாரதியார்

பாரதியார் தோத்திரப் பாடல்கள்’ என்ற பகுதியுள் கண்டுள்ள முருகா! முருகா!’ என்ற பாடலில் சில அடிகள் தம் நெஞ்சை அள்ளும் நீர்மையனவாய் உள்ளன. அவை:

வருமாறு :

வருவாய் மயில் மீ தினிலே

வடிவே லுடனே வருவாய் தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா): சுருதிப் பொருளே, வருக

துணிவே கனலே, வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார்

கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) அறிவா கியகோ யிலிலே

அருளாகிய தாய் மடிமேல் பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்

புதுவாழ்வு வுறவே புவிமீ தருள்வாய் (முருகா),

அடுத்து வேலன் பாட்டு என்ற பாடலில்,

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை:

வேலவா!-அங்கோர்

வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி

யானது, வேலவா! ==

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள் சிறு.

வள்ளியைக்-கண்டு