பக்கம்:முருகன் காட்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகும் உலகும் 1 5

திருமுருகாற்றுப்படையாகும். பத்துப்பாட்டினுள் முதலில் காப்பாக அமைந்தது திருமுருகாற்றுப்படையாகும். எட்டுத் தொகை நூல்கள் பலவற்றிற்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாடியுள் ளார். ஆனால் அதுபோலப் பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் என்று ஒன்று தனியாகக் காணப்பெற, வில்லை. திருமுருகாற்றுப்படையே பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த் தாக-காப்புச் செய்யுளாக அமைந்துள்ளது. மேலும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோ ராந்திருமுறையில் சேர்க்கப் பெற்றிருக்கும் பெருமையை யும் இந்நூல் கொண்டுள்ளது.

பழந்தமிழர் இயற்கையோ டியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தனர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இயற்கை யில் இறைவனைக் கண்டனர். எங்கெங்கெல்லாம் எழில் களிநடம் புரிகின்றதோ அங்கங்கெல்லாம் இறைவனின் அருட்பொலிவைக் கண்டனர். காலையிளம் பரிதியிலும், கடற்பரப்பிலும், ஒளிப்புனலிலும் அழகைக் கண்டனர். இயற்கையையும் தங்கள் உறவாக எண்ணி மகிழ்ந்தது அக் காலக் கவிஞர்தம் நெஞ்சம். புன்னை மரத்தைத் தமக்கை யாக எண்ணி அதனெதிரில் தன் தலைவனோடு பேசு வதற்கு நாணிப் பிணங்கிய தலைவியை நாம் நற்றிணையில் காண்கின்றோம்.

நமக்கு ஒன்று உரையாது போயினும் படப்பை வேங்கைக்கு மறந்தனர்கொல் புள்வாய்த் துதே என்று கவல்கின்ற தலைவியை நாம் குறுந்தொகையில் சந்திக் கின்றோம். அரும்புகளையும் அன்னங்களையும் தன்னோ டொத்த நிலையிலே எண்ணி அவற்றை நோக்கி விளித்துத் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தும் மாதவியினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலே சித்திரித்திருக் கின்றார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/17&oldid=585896" இலிருந்து மீள்விக்கப்பட்டது