பக்கம்:முருகன் காட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் வரலாறு 25.

பாண்டியன் மனத்தில் தோன்றிய ஐயத்தை அகற்றும் வகையில் ஒரு பாடல் கிடைத்தால், தன்னுடைய தீராத வறுமையும் திருமே என்று எண்ணி ஏங்கி நலிந்த ஏழைத் தருமி எல்லாம் வல்ல இறைவனாம் சிவபெருமானிடம் தன் குறை தேர்ந்து முறையிட்டுக் கொண்டான். அவன் வேண்டுகோளை ஏற்று இறைவன் எழுதியளித்த பாட்டே இக் கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாட்டாகும்.

இப் பாட்டு எட்டுத்தொகை நூலில் ஒன்றாகிய குறுந்தொகையில் இரண்டாவது பாடலாக அமைந்துள்ளது.

அது வருமாறு:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

-குறுந்தொகை: 2

குறுந்தொகையில் இப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனார் என்று காணப்படுகிறது. குறு ந்தொகையின் இறுதியில் இத்தொகை முடித்தான் பூரிக்கோ’ என்று காணப்படுகின்றமையால் சிதறு.ண்டு கி ட ந் த சங்கப் பழம் பாடல்களில் நானுாற்றை அடியளவு கண்டு பார்த்துத் தொகுத்துக் குறுந்தொகை’ என்ற நூலாக நமக்குத் தந்தவர் பூரிக்கோ’ என்னும் தல்லார் என்று நாம் அறிகின் றோம்.

இப்பாடலின் கீழ்க் காணப் பெறும் பழங்குறிப்பு இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற கலைமகன் தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு

மெய் தொட்டுப்பயிறல் முதலாயின அவண் மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அ ன் பு தோற்ற தலம் ப. ராட்டியது’ என்று காணப்படுகின்றது. ஆயினும்

  1. s 圖 ■ - i. ■ o *— 語 = தமிழ்நாவலர் சரிதையில் இந்தப் பாடலின் அடியிற்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/27&oldid=585907" இலிருந்து மீள்விக்கப்பட்டது