பக்கம்:முருகருந் தமிழும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 49 னுக்காக மாடுமேய்ப்பவனுய்த் தோன்றி உதவிய ஆடல் வெளியாகின்றது. மேற் கூறியவாறே பிற்காலத்தும் முருகக் க்டவுளின் அதுக்கிரகம் பெற்று அவர்மீது தமிழ்ப் பாடினர் பலர். பகழிக் கூத்தர் என்னும் வைணவர் - முருகன் அருள் பெற்று வயிற்றுநோய் நீங்கத் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடினர். 爹° வென்றிமாலைக் கவிராயர் - முருகன் அருள் பெற்று கிருச் செந்துார்ப் புராணம் பாடிய சரித்கிரமும் அப் புராணத்திற் காணக் கிடைக்கும். (2) 'சிதம்பரசுவாமிகள் - முருகன் கிருவருட்டுணேயைக் கொண்டு திருப்போருர்ச் சந்நிதிமுறை பாடினர். கச்சியப்ப முகிவர் - தமது அருமை மாணுக்கரும் விசேட பத்தியுடையவருமான கந்தப்பையாது வயிற்றுநோய் நீங்கத் திருத்தணிகை யாற்றுப்படையைப் பாடி முருகபிாாற்குத் தமிழில் உள்ள ஆர்வத்தைப் பிரகாசப்படுத்தினர். சுப்பிரமணிய முகிவர் - என்னும் அமிர்தகவிப் புலவர். சுப்பிரமணியர் திருவிருத்தமும், திருத்தணிகைத் திருவிருத்தமும் பாடித் தம்மைச் சரணடைந்த இருவர்களுக்கு முறையே நேர்ந்திருந்த குட்ட்ரோகத்தையும் அந்தகத் தன்மையையுங் தீர்த்தனர். கந்தப்பதேசிகர் F. தணிகாசலஅநுபூதி பாடி ஒருவருடைய நோயைத் தீர்த்தனர். இங்கனம் முருகன் அருள்கொண்டு தமிழ்ப் பா பாடின பெரியோர்கள் பின்னும் பலருளர். விரிக்கிற் பெருகும் என்று விடப்பட்டன.