உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1034

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுகுமலை திருப்புகழ் உரை 561 முதல! (முதல்வனே) கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய உடல் அழிய வேலைச் செலுத்தினவனே! கறுத்த மேகத்தை ஒத்த நிறத்தை உடைய திருமாலின் அழகிய மருகனே! வாழை, கமுகு சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்பச் சிறந்த தருமச் செயல்கள் மேம்பட்டு விளங்கும் கழுகுமலை மகா நகர்க்குள் வீற்றிருக்கும் பெருமாளே! (கொடியவாளிடத்திலே எனக்கு இனி முடியாதே) 415 கொங்கையை மூடித் திறப்பார்கள்; ஆடையைத் தளர உடுத்துப் படுப்பார்கள்; வாயிதழ் ஊறலையும் முத்தத்தையும் முறை முறை (மாற்றி மாற்றிக்) கொடுப்பார்கள், அழகிய - அல்லது பொலிவுள்ள - மலர்ப்படுக்கையின்மேல். நிலைகுலையக் கொண்டு அணைப்பார்கள், ஆண்களின் மனோதிடத்தைக் கலங்க வைப்பார்கள், மோக மயக்கம் பெரிதாகத் 蠶 து அவர் பொருளைக் கையிற் பறிப்பார்களாகிய வேசையர்களின் உறவு ஆமோ! (ஆகாது என்றபடி). தலைமுடி பத்தும் தெறிப்புண்டு (சிதறுண்டு), இராவணனுடைய உடல் தொளைப்பட்டுத் துடித்திடவே, ஒப்பற்ற வில்லை வளைத்துச் செலுத்தின அம்பினனாம் பூரீ ராமரின் (திருமாலின்) மருமகனே! a Յ5ՅՈGՆ) (ஒற்றைக்கலையில் நின்ற) சந்திரன், (கங்கை) நீர், இவைகளைத் தரித்த சடையர் அளித்த வெற்றித் திருக்கை வேலனே! கழுகுமலையிற் சிறப்புடனே வீற்றிருக்கும் பெருமாளே! (வேசைகள் உறவாமோ) (முன் பக்கத் தொடர்ச்சி) எஞ்சி நின்ற சமயத்திற் சிவபிரானை வேண்ட, அவர் திங்களைத் தமது சடையிற் சூடினதால், தக்கன் சாபம் சாராது, அந்த ஒரு கலை தேயாது எஞ்சி நின்றது. "எம்முடிச் சேர்த்திய சிறப்பால் அந்தமில்லை இக்கலை" - (கந்தபுரா. சந்திர சாப - 44)