பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1046

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கதிர்காமம்) திருப்புகழ் உரை 573 சுத்த வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத திரனாய்க், கடலைத் தாண்டி அப்புறம் (இலங்கைக்குச்) சென்று. (சீதேவி) மாது இருந்த (அசோக) வனத்தை அடைந்து பூரீராமபிரான் தந்தருளிய பொன்னாலாகிய அழகிய மோதிரத்தைச் சீதைக்கு அளித்துற்றவராகிய அநுமார்க்கு அன்புடன் அனுக்கிரகித்துக் கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (பவகிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே) 421 இணையில்லாத பத்திநிலையை அடைந்து இனிய (உனது) திருவடிகளின் நினைப்பை காலை மாலை இருபோதிலும் (எனது) இதயம் (நெஞ்சம்) என்னும் கடலில் உறவு பூண்டு (அத் திருவடிகள்) எனது உள்ளத்தே சிறந்து விளங்க அருள்வாயே கதிர்காம மலையில் உறைபவனே! பொன்மய மேருமலைக்கு ஒப்பான புயவீரனே! இனிமை தரும் (நாதம் பொருந்திய) கழல்களை உடைய வனே! (அல்லது இனிய சரசுவதி தியானித்து வணங்கும் கழலோனே!) பாண்டியனது கூனை நிமிர்த்தின பெருமாளே! (இனிய தாள் நினைப்பை அருள்வாயே)