உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1052

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம்) திருப்புகழ் உரை 579 சரியை, கிரியை, யோகம் என்னும் வழிகளில் நிற்கும் அருளும் பரிசுத்தமும் வாய்ந்த பெரியோர்களும் தம்மை உணரும்படியாகத் (தம்மைக் கண்டு மோகிக்கும்படியாக) ஆசை (காட்டும்) வழிகளிற் பொருந்தி. உமது திருவடியை உன்னாருக்கும் (நினையாதவர்க்கும்) (அனுமரண மாயைக்கும்) மரணத்தொடு கூடிய மாயையிற் பட்டவர்க்கும் (அல்லது மாயைக்கும்) உரியவராய் (சொந்தக் காரராய்), விசேடம் பொருந்திய கிளிகள் எனப்படும் மாயைகள் வல்ல பொது மாதர்களுடைய விளங்குகின்ற படுக்கையிடத்தே சிக்கிக்கொண்ட எனக்கும் உனது அருட்கிருபாசித்தத்தை (திருவருட்பிரசாதத்தை) அருள் கூர்ந்தளிக்கவேணும். - இமயமலையின் குமாரி, அநுபவை (அதுபோகங்களை இன்ப நுகர்ச்சிகளை ஊட்டுபவள்), பராசத்தி, எழுதுதற்கரிய காயத்திரி மந்திரத்தினள், உமையவள் ஆகிய பார்வதி குமாரனே! வேடர் மடமானாம் வள்ளியின் பொருட்டு மடல் எழுதி மோகத்தைக் காட்டி, (அவளிருந்த) பரண் அருகே சேவித்து நின்ற முருகா! விசாகனே! தேவர்களைச் சிறையினின்று விடுவிக்க வேண்டிப் போர் செய்து கீர்த்தியுற்ற மிக மேலான திறமை வாய்ந்த கவிராசராசனே! தேவியின் திருமுலைப் பாலுண்டு, உலகை والتي يا)/9ے (திருப்பதிகங்களைப் பாடியும், திருநீற்றைப் பரப்பியும்) வாழ்வித்த கவுணியகுல்ச் சூரியனே! அருமை வாய்ந்த கதிர் காமத்துக்கு உரிய அழகனே! (உன தருள் க்ருபாசித்தம் அருள் கூர வேணுமே)