உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1072

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கோணமலை திருப்புகழ் உரை 599 அழியாது நிலைத்து நிற்கும் நாலுவேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் உள்ள திருக்கோணமலை என்னும் தலத்தில் விளங்கும் கோபுர நிலையின் வாயிலில் "கிளிப்பாடு பூதி" என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே! நிகழ்கின்ற (நடக்கின்ற) ஏழுபிறப்பு என்னும் சமுத்திரம் சூறைபட (கொள்ளைபோய் அழிய)த் திருக்கரத்தில் எடுத்த வேலைப் பகைவர்கள் பொடிப் பொடியாகப் போகும்படி செலுத்தின பெருமாளே! நினைத்த காரியங்களெல்லாம் அனுகூலமாம்படி அருளும் பெருமாளே! (அருள் தரவேணும்) சிகிளிப்பாடு பூதி - திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் ஓரிடத்துக்குக் கிளிப்பாடு பூதி என்று பெயர் என்ப. "அருணகிரிநாதர் கிளியுரு எடுத்து இத்தலத்து எழுந்தருளித் திருப்புகழ் பாடித் தோத்திரம் புரிந்தருள் பெற்றார். அது கிளிப்பாடு பூதியில் வருவோனே' என இத்தலத் திருப்புகழிற் கூறி அருளியதனாலும் பெறுதும். அதுபற்றி "வன்னி மங்கலம் என்னும் சிறப்புப் பெற்றுள்ளது." . சுப்பிரமண்ய பராக்ரமம் பக்கம் 346 (வன்னி - கிளி). கிளிப்பாடு பூதி என்பதற்கு (அருணகிரியார் கிளியான பின்பு பாடின) கந்தரநுபூதி எனப் பொருள் கொண்டால் இந்தத் திருப்புகழ் அருணகிரிநாதர் பாடினதா என்பதை ஆராய வேண்டிவரும்.