பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1076

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 603 காட்டில் வசித்த வேடன்* அன்புடன் செய்த பூசையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட கதிர்காமத் தலத்தைக் கொண்டவனே! செககண சேகு தகுதிமி தோதிதிமி யென்று ஆடும் மயில் வாகனனே! லட்சுமிகரம் நிறைந்த t பழமுதிர்சோலை மலைமேல் வீற்றிருக்கும் பெருமாளே! (எளியனும் வாழ எனதுமு னோடி வரவேனும்) 434

  1. இலவம்பூப் போன்ற சிவந்த வாயிதழ்களை வகைப்

படுத்தி, முறையாக மன்மத கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக தர்க்கங்களைப் பேசி எதிரில் தாக்கும் அச்சந் தரும் பாரமான, கத்துாரி முதலிய அணிந்து ஆடம்பரமாயுள்ள துணைக் கொங்கைகள் மார்பிற் பொருந்த மன்மதராசனுடைய காமலீலைச் சேர்க்கையில் (வேகத்துடன்) ஒடி, நெடுநாள் பலவிதமான போகசுகத்தை உண்டுபண்ணும் காமபோக புணர்ச்சியிற் பேர் பெற்ற லீலைகளுடன் மடப்பம் பொருந்திய மாதர்களுடைய (முன் பக்கத் தொடர்ச்சி) t அருளிய - அன்புடன் செய்த பூசை அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து" - பெரிய புராணம் ஞானசம் - 535.

  1. பழம் . முதிர் - சோலை: முதிர் - மிகுதல். "அரி முதிர் அமரர்க் கரசனாகியும்" (கல்லாடம் - 9) என்புழிப் போல.

S இலவம்பூ சிவந்த வாய்க்கு உவமை இலவ மலர் - செந்நிறம். எரிமலர் இலவத்து பெருங்கதை 1.54-143. இலமலர்ச் செவ்வாய். பெருங்கதை 1.33-118; இலவலர்வாய் இன்னமிர் தம் எய்தினான் - சிந்தாமணி 482.