பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக்கு முகவுரை "தகப்பன் சாமி எனவரு பெருமாளே!. புவிதனில் எனக்குண் டாகு பணிவிடை கணக்குண் டாதல் திருவுளம் அறியாதோ!" - திருப்புகழ், 1178. என்று எமது அருணகிரியார் கூறியவாறு, அடியேன் இப்புவியிடை வாழு நாளிற் செய்ய வேண்டிய பணிகளை வகுக்கின்றவர் திருத் தணிகேசரே! புன்னெறியதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி ஆள்வாய் பன்னிரு தடந்தோள் கொண்ட பராபர! தணிகைநாத! என அவரை இடைவிடாது வேண்டினேன்.என் வேண்டு கோளுக்கு இரங்கினார்; இரங்குகின்றார் - என்பது இப்போது வாய்த்துள்ள வாய்ப்பே தெரிவிக்கின்றது. முருகவேள் நூல்கள் திருமுறை வடிவில் வெளிவரலாம் எனக் குருகுல ஆசிரியர் திரு இளஅழகனார் முதலில் விரும்பினார். நன்று எனத் தோன்றிற்று. பின்னர்த் திருப்புகழ்ப் பாக்களுக்கு நீங்களே பொழிப் புரைப் பொருளும் எழுதுதல் நன்று என்றனர். பொருள் எழுதுங்கள் என்றதும் என் நெஞ்சம் நடுக்குற்றது. என் அறிவின் சிறுமையை உணர்ந்த நான் என்னால் முடியாது; பொருள் விளங்காத பகுதிகள் பலவுள' எனக் கூறி மறுத்தேன். எவ்வளவு மறுத்தும் இளஅழகனார் என்னை விடவில்லை; திருப்புகழின் உயர்வெங்கே! சிறியன் இவன் துணிவென்னே!" என உலகோர் நம்மை ஏசுவரே என அஞ்சினேன். பின்பு, இறைவரே ஒரு துணிவைத் தந்தனர். முன்னவனே முன் நின்றால் முடியாத பொருளுளதோ என்னும் சேக்கிழார் திருவாக்கு மனத்தில் ஊன்றிற்று ஒர் ஊக்கத்தைத் தந்தது