பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் திருவருள் துணை நிற்குமாயின் எதுதான் முடியாது எனும் துணிவும் பிறந்தது.உரை எழுதத் துணிந்தேன். இறைவன் என் அறியாமையை விலக்கி அருளவேண்டும். பெரியோர் என் துணிவையும் குறைகளையும் பொறுத்தருள வேண்டும். முக்குண வசத்தால் முறை பிறழ்ந்து உரை எழுதின இடங்கள், பொருள் விளங்கா இடங்கள் ஆங்காங்குப் பலவுள. இக் குறைகளை அன்பர்கள் பொறுக்க வேண்டும்; புலவர்கள் எள்ளி நகையாடாது பொறுத்தல் வேண்டும். திருப்புகழ்ப் பாடலின் ஒவ்வோரடிக்கு நேராக அதன் உரைநடை அச்சிடப்பட்டுள்ளது. அதனால் இன்ன சொல்லுக்கு இது பொருள் என்பதும் எளிதில் விளங்கும்; எழுதியுள்ள உரைப் பகுதிகள் புலவர்களுக்கு வேண்டா விடினும், ஏனையோர்க்குப் பயன்படுமாயின், இந்நாள் எனக்குப் பயப்பட்ட திப்பிறவி இந்நாள் எனக்குப் பயப்பட்ட தியான்செய்தவம் இந்நாள் எனக்குப் பயப்பட்ட தென் அறிவும்: இந்நாள் இவ்வுரையெழுத இறைவனருள் கூடினதால் என மகிழ்ந்து அவன் திருவருளையே வியப்பேன். சென்னை வ.சு. செங்கல்வராய பிள்ளை 3-4-1951.