பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 195 மணத்தையும் பசுமையையும் கொண்டுள்ள மார்பில், சூதாடு கருவி ஒத்ததான (கொங்கைகள்) பந்துபோல ஆட, இழிகின்ற வேர்வை (உடலிற்) பாயக், கடல் போன்றதும் கொஞ்சுதல் நிறைந்ததுமான கண்ணும், தோளும், கையும் (ஒன்றுபடச்) சேரத் தந்து (காமலீலை) ஆடுபவருமான (வேசையர்கள் மீது) ஆசை (உறவு) கொள்ளுதல் ஆமா? (கூடாது) என்றபடி, தீததோதகம். டீகு டீகுகம் போல ஒள்ளிய பேரிகைகளும் முரசங்களும் பேரொலி செய்ய - ஆதிசேடனும், மேரு மலையும், சூரனும், தாருகனும் விழவும், ஏழு மலைகளும் தூள் துாளாகவும், தேவர்கள் ஜேஜெ ஜேஜெ என்று ஆடவும் விளங்கி நின்று, கூத்து ஆடிச் செலுத்திய, நெருப்பன்ன வேற் படையை உடையவனே! தந்தை காதில் அங்கே ஒதின அழகிய (திரு) முகங்கள் ஆறும், தோள்கள் (பன்னிரண்டும்) பூரிக்க, வழி வழி யின்பம் தரும் சுகத்தைக் கொண்டவளும், மார்பில் அலங்காரம் கொண்டவளும், எனது (அருமைப்) பதுமை போன்றவளுமான வள்ளிநாயகியாம் எங்கள் மாதை - மரச்சோலையினிடையே, பட்டாடை சோர, அணிந்துள்ள கோக்கப்பட்ட மணிவடங்கள் ஆடப் புணர்ந்து, (அவளுடன்) விளையாடிச் செப்பத்துடனே (வளர்ந்த) தென்னைகள் வான் அளாவி ஒங்கும் (திருச்) செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே! '(பொது மகளிர்) சந்தம் ஆமோ. 1. மரச்சோலையிடையே வள்ளியொடு அண்ணல் தங்கினார். 'காமன் படை பெற்றுக் குலவுமாங்கோர் பசுமரக் காவுட் சேர்ந்தான் ...செழுமலர்க் காவிற் புக்கு வஞ்சியோ டிருந்த காலை" - கந்த புராணம் - வள்ளி திருமணம் - 169-170,