பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 231 98 சுக்கிலத்தில் ஊறிவந்த உடல் (கோடி), வெந்த (உடல்) கோடி இனி மேலாவது (உன்னை விட்டு) நீங்காமலிருப்பதற்கு உன்னுடைய திருவடியை விரும்புகின்ற கற்றோர் (புலவர்) போல அடியேனும்:(நல்வழிக்கு) விந் து, நாசமும் பழைய வினை என்கின்ற கேடும் திரும்படி வளப்பம் பொருந்திய சிவஞான வடிவை அடைந்து - நிலையான பதவியை அடைந்து (பிறப்பு - இறப்பு) என்னும் எனது களைப்பு நீங்க (நீ) வந்து திருவருளைப் பாலிக்கும் உனது திருவடி மலரைத் தந்தருளுவாயாக எனது உள்ளத்து உள்ளே ஒப்பற்ற ஒரு செஞ்சோதியாக விளங்கி, என் கண்களிற் பொலிந்து திகழும், நெருப்பு நிறமான சடைகளையுடைய, என் தந்தையும், (தம்மைத் தேடுகின்ற அன்பர்களுக்கு உதவுபவரும், எங்கள் சுவாமியுமான சிவபிரான் அருளிய குழந்தையே! அழகும், ஞானமும், மென்மையும் உடைய குறமாது (வள்ளியின்) திருமார்பில் அணைபவனே! அழகு திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தனே! தேவேந்திரர்களுக்குப் பெருமானே! (பாதமலர் தாராய்.)