உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி! திருப்புகழ் உரை 239 101 ஞானோபதேசத்தைத் தந்த தலைவனே உன்னை வணங்கு கின்றேன், வ்ணங்குகின்றேன்; நீதிக்கு இருப்பிடமாகும் தேவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; பூமண்டலத்தை ஆள்பவன்ே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். அணிகலங்கள் யாவையும் - அணிகின்ற பெருமானே! உன்னை வணங்குகின்றேன். வணங்குகின்றேன்; வேடர் குலக் கொடியாம் வள்ளியிடம் ஆசை பூண்டவனே! உன்னை வணங்குகின்றேன், விணங்குகின்றேன்; (தாமரை) மலரில் வீற்றிருப்பவனாம் பிரமன் புகழ்கின்ற சாமியே! உன்னை வணங்கு கின்றேன், வணங்குகின்றேன்; அருமையான, வேத மந்திரங்களின் வடிவு கொண்டவனே! உன்னை வண்ங்குகின்றேன், வணங்குகின்றேன்; ஞான பண்டித நாதனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; வீரக்கழலை அணிந்த திருவடியாய்! உன்னை வணங்கு கின்றேன், வணங்குகின்றேன்; அழகான - திருமேனி விளங்கும் வேளே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; தேவருலகில் வளர்ந்த அழகிய தோள் வளை அணிந்த தேவசேனைக்கு நாயகனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; வெற்றிப் பொலிவுகொண்ட விசாகனே! உன்னை வணங்கு கின்றேன், வணங்குகின்றேன்; உனது திருவருளைத் தந்தருளுக பாதகம் நிறைந்த சூரனாதியர் இறந்து படும்படி கூரிய வேலா யுத்த்தாலே போர் செய்து பெருமை, பொருந்திய தேவர்கள் வானுலகிற் சேரும்படி அருள் புரிந்தவனே! பாதி நிலவை அணிந்த சடையினர், குலப்படை ஏந்திய சங்கரனார், இசைத் தலைவர், கனத்த திண்ணிய புயங்களைக் கொண்ட ஒளியினர்; கயிலாய மலையினர்;