பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 303 128 பருத்துள்ள சிமிழ் போன்று முத்து (மாலை) அணிந்த ரவிக்கை கிழியும்படி உள்ளே விம்மி,கலசத்துக்கு ஒப்பாகிப்புளகங் கொண்டு, (சந்தனக்) கலவை பூண்டு. செருக்குற்ற கொங்கை சேர் உட்லைப் புணர முனைந்து நின்று, (கலவைப்) போர் புரிகின்றஒழுக்க முறையைத் தினமுங்கொண்டு, ழயக்கம் பூணும் என் மீது, அறிவு இல்லாத பயனிலியான (என்மீது), ČUTгТобт - அசடனாகிய (என்மீது), உயர்வு ஒப்பு இல்லாத (உனது) கிருபையைக் காட்டி - அடிமையாம் எனக்கு ஒர் உபதேசச் சொல்லைப் புகன்றருளுவாயாக. குடம் போன்ற மத்தகக் கதுப்பினின்றும் மதநீர் கலங்கல் நீர் போல ஒழுகும் (யானை முகக் கடவுளுக்குத் தம்பியே!) குணமும் மெய்ம்மையும் கொண்டயானைமுகக் கடவுளுக்குத் தம்பியே! (தேவர்கள் பொன்னுலகிற்) குடிபுக மிண்டு (நெருங்கி வந்த) அசுரர் படைகளை நெருங்கி அப் படைகள் நொறுங்கி ஒழியப் போர் புரிந்த வேலனே! பரந்து அடர்ந்துள்ள நல்ல வாழைக் குலையில் பழங்கள் முதிர்ந்து (தேன்) ஒழுக, நீர் சேர்ந்த நீண்டவயற் கரையில் மூங்கில்களின் முத்து உதிரும் நல்ல பழநிக் குமரப் பெருமாளே. (அடிமைக் கொரு சொற் புகல்வாயே). 129 கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும் கடுமையும் கொடுமை யுங் கொண்ட் முத்தலைச் சூலம் ஏந்திய யமன் - கோபித்து, நெருக்கி அழுத்தும் பாசக்கயிறு கொண்டு உயிர் நீங்கும்படியாக முடுகி எழுந்து வரும்போது - திரிகின்ற நரியும் எரியும் உரிமை காட்டி நெருங்கி அணுகாமல்