பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழ் உரை 19 i 'முத்துப்போன்ற வரிசையாய் (விளங்கி) முத்திச் செல்வத்தை அளிக்கும் பற்களையுடைய யானைக்கு (தேவசேனைக்கு) இறைவ! சத்திவேல் (ஏந்திய) சரவண1 முத்திக்கு ஒரு வித்தே! குருபரனே! என ஒதிநின்றமுக்கண் கொண்ட பரமனுக்கு வேதத்தில் முற்பட்டு நிற்கும் பிரணவத்தைக் கற்பித்துப் பிரம விட்ணுக்களாம் இருவரும் முப்பத்து மூன்று வகைத் தேவர்களும் (உனது) திருவடியை(ப் போற்றி) விரும்ப, (அவுணருடன் போர் செய்ய வல்ல பெருமானே!) 1. முருகவேள் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது. “அருணகிரிநாதர் அருணை.வடவாசலிற் பயில-பத்திதரு முத்தி நகை அத்தியிறைவா எனப் பாடென்று சொல்லி'- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ். 'அருணகிரி நாதரையும்...கவி சொல் என்றே அடி எடுத்துக் கொடுத்தவன் கனிவாயின் முத்தம் அருளே’ - சேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ். இப்பாடலின் முற்பாதியின் பொருளும் சொல்லும் முத்து நவரத்ன என்னும் 971 ஆம் பாடலிலுங் காணக் கிடக்கின்றன. இப் பாடலின் முதலடியை வெண்பாவில் அமைத்துப் பாடுக என்ற போது மாம்பழக் கவிச் சிங்கம் பாடிய வெண்பா; “வரமுதவிக் காக்கும் மனமே வெண் சோதி பரவியமுத் தைத்தரு பத்தித்திருநகையத் திக்கிறை சத்திச் சரவணமுத் திக்கொருவித் துக்குரு ரன்னெனவோ து." į ~