பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை (காப்புத் பத்துத்தலை தத்தக் கணை தொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்: பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே? தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்டிற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்ப்லி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே. (1) 1. தொட்டு எனற்பாலது. தொடு” எனத் தொகுக்கப்பட்டது. 2. கிரி மத்தைப் பொருது - மந்தரகிரியாகிய மத்தைக் கொண்டு (திருப்பாற்கடலைக்) கடைந்து. 3. அட்ட பயிரவர் - அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு. குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்-சீகாழிப் புராணம், கடவுள் வாழ்த்து. 17.